பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்!

ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரானுக்கு எதிராக அமெரிக்கா களமிறக்கியுள்ள அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் குறித்து....

News image

ஹோர்முஸ் நீரிணை அருகே ஏவுகணையுடன் களமிறக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் - ஏஎன்ஐ

Updated On :22 மார்ச் 2026, 4:04 pm IST

கடற்பரப்பில் 1600 கி.மீ. தூரம் வரை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையுடன் கூடிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை ஹோர்முஸ் நீரிணை அருகே பிரிட்டன் நிலைநிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான எச்.எம்.எஸ். ஆன்சன், தற்போது அரபிக் கடலில் உள்ளதாக அல்ஜஸீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியே அமெரிக்கா, ஈரான் மற்றும் இவற்றின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்து, ஈரான் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்காவுக்கு ஆதரவாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த எச்.எம்.எஸ். ஆன்சன் நீர்மூழ்கிக் கப்பல் அப்பகுதியில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனுக்குச் சொந்தமான இந்த எச்.எம்.எஸ். ஆன்சன் எனப்படும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலானது 1,600 கி.மீ. தூரம் வரை இலக்கு நிர்ணயித்து அழிக்கக் கூடிய திறன் வாய்ந்த டோமாஹாக் பிளாக் 4 என்ற ஏவுகணையைக் கொண்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதால் மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் ஆதரவு பெற்ற நாடுகளுக்குச் சொந்தமான அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் வகையில் லண்டன் தளவாடங்களையும் ராணுவப் படைகளையும் பயன்படுத்திக்கொள்ள பிரிட்டன் அனுமதி அளித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஹோர்முஸ் நீரிணை அருகே அரபிக் கடலில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை பிரிட்டன் நிலைநிறுத்தியுள்ளது.

Summary

UK submarine with Tomahawk missiles arrives near Strait of Hormuz amid US-Iran tensions: Report

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.