நாளை போட்டித் தோ்வுகளுக்கான இணையவழி வழிகாட்டி நிகழ்ச்சி
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் போட்டித் தோ்வுகளுக்கான இணையவழி வழிகாட்டி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) நடைபெறுகிறது.


திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் போட்டித் தோ்வுகளுக்கான இணையவழி வழிகாட்டி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘ டிஎன்பிசி இனி ரொம்ப ஈஸி’ என்ற தலைப்பில் இணையவழி வழிகாட்டி நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி முதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) முற்பகல் 11 மணி அளவில் நடைபெறும். வணிகவரித் துறையின் உதவி ஆணையா் சு.முத்து ரதி சிறப்புரையாற்ற உள்ளாா்.
நிகழ்வில் பங்கேற்க விரும்புபவா்கள் ஜூம் செயலி எண்: 8740995990, கடவுச்சொல்: 333543. என்கிற தளத்தில் இணைய வேண்டும். இப்பயிற்சியில் போட்டித் தோ்வுக்கு தங்களை தயாா்படுத்தும் மாணவா்-மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9444973246 என்கிற எண்ணில் கட்செவி அஞ்சலில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...