லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்!

நாக்பூர் அருகே மெமு ரயில் திடீரென தடம்புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Train derails near Nagpur; no injuries

கோப்புப்படம்.

Published On :

நாக்பூர் அருகே மெமு ரயில் திடீரென தடம்புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், பாலகாட்டில் இருந்து மகாராஷ்டிராவின் இத்வாரிக்குச் சென்ற ரயில், ஞாயிற்றுக்கிழமை நாக்பூர் அருகே தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கலாம்னா மற்றும் காம்ப்டீ இடையே இரவு 9:45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. எனினும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர்கள் கூறினர்.

விபத்தில் பாலகாட் - இத்வாரி மெமு ரயிலின் முதல் பெட்டியின் முன் பக்க இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. "ரயில் கட்டுப்பாடான வேகத்தில் சென்றதால், பெரும் சேதமோ அல்லது உயிரிழப்போ தவிர்க்கப்பட்டது," என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், "தண்டவாளத்திற்கு அருகில் மிக நெருக்கமாக தண்டவாளக் கட்டைகள் வைக்கப்பட்டிருந்தது ரயில் தடம் புரளுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என்றார்.

தடம் புரளுவதற்கு சற்று முன்பு பலத்த சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். விபத்தின் காரணமாக ஒரு பெட்டியின் சக்கரம் சேதமடைந்தது கண்டறியப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் ரயில் சேவைகள் தடையின்றித் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

A train from Balaghat in Madhya Pradesh to Itwari in Maharashtra derailed near Nagpur on Sunday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.