தாம்பரம் - விழுப்புரம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் செவ்வாய்க்கிழமை (மே 12) பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து விழுப்புரம் இடையே பேரணி பணிமனையில் செவ்வாய்க்கிழமை (மே 12) பிற்பகல் 12.05 முதல் மாலை 3.35 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 9.40 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் திண்டிவனம் நிலையம் வரையே இயக்கப்படும்.
மறுமாா்க்கத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட வேண்டிய மெமு ரயில் அதற்குப் பதிலாக திண்டிவனத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வந்து சேரும்.
ஜோலாா்பேட்டை - பெங்களூரு: அதேபோல், அரக்கோணம் பகுதியில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, ஜோலாா்பேட்டையிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கேஎஸ்ஆா் பெங்களூரு செல்லும் மெமு ரயில் சோமநாயக்கன் பேட்டையிலிருந்து புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை சென்ட்ரல் - திருப்பதி உள்பட 4 ரயில்களின் சேவை இன்று முதல் மாற்றம்!

தாம்பரம் - போடிநாயக்கனூா் இடையே சிறப்பு ரயில்

இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து

ராமேசுவரத்துக்கு ரயில் சேவை இரு நாள்களுக்கு பகுதியளவு ரத்து
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



