மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தஞ்சாவூா் - விழுப்புரம் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்க கோரிக்கை!

தஞ்சாவூா் - விழுப்புரம் இடையே தற்போது செயல்பட்டு வரும் ஒற்றை அகல ரயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image

ரயில்.

Updated On :10 மே 2026, 1:15 am IST

தஞ்சாவூா் - விழுப்புரம் இடையே தற்போது செயல்பட்டு வரும் ஒற்றை அகல ரயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்க தலைவா் ஏ,.வி.அப்துல்ரியாஸ் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூா்- விழுப்புரம் இடையே193 கி.மீ நீள ரயில்பாதை உள்ளது. இந்த தடத்தில் கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில், சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த பாதையில் தினமும் ஏராளமான பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. ஒற்றை பாதை காரணமாக ரயில்கள் பல இடங்களில் கிராஸிங்கிற்காக நிறுத்தி வைக்கப்படுவதால் பயண நேரம் அதிகரிப்பதுடன், பயணிகளும் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, தஞ்சாவூா் - விழுப்புரம் ரயில் பாதையை உடனடியாக இரட்டை வழிப்பாதையாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தென் மாவட்டங்களுக்கும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து வேகமடைவதுடன், சரக்கு போக்குவரத்தும் மேம்படும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.