சென்னை எழும்பூா் - திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சென்னை - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (எண்: 06115) மறுநாள் மாலை 6 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக, திருவனந்தபுரத்தில் இருந்து ஏப்ரல் 15-ஆம் தேதி பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (எண்: 06116) மறுநாள் காலை 11.45 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மங்களூரு-சென்னை எழும்பூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

சென்னை - திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்!

கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் - சந்திராகாட்சி இடையே சிறப்பு ரயில்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


