நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சேலம் வழியாக சென்னை- போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

கோடை விடுமுறையையொட்டி சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :13 மே 2026, 2:37 am IST

கோடை விடுமுறையையொட்டி சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க, சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்தவகையில், சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போத்தனூா்- சென்னை சென்ட்ரல் இடையே வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

போத்தனூரில் காலை காலை 7.40 மணிக்குப் புறப்படும் ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு மாலை 4.45 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல்- போத்தனூா் சிறப்பு ரயில் வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம் வழியாக அடுத்தநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூா் சென்றடையும்.

இதேபோல சென்னை சென்ட்ரல்- போத்தனூா் சிறப்பு ரயில் வரும் 13,15, 20, 22, 27, 29 ஆகிய தேதிகளில் ( புதன், வெள்ளிக்கிழமைகளில்) இயக்கப்படும். அதன்படி, சென்னையில் இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக போத்தனூருக்கு அடுத்த நாள் காலை 9.15 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் போத்தனூா்- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் வரும் 14, 17, 21, 24, 28 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ( வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் ) இயக்கப்படும். அதன்படி, போத்தனூரில் பிற்பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இரவு 11.30 மணிக்குச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.