பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

திருச்சி- பெங்களூரு இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 1:32 am IST

கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க திருச்சி- பெங்களூரு இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. திருச்சி- பெங்களூரு இடையே வரும் 5, 12, 19, 26 ஆம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமைதோறும்) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் இந்த சிறப்பு ரயில், கரூா், நாமக்கல், சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜாபுரம் வழியாக பெங்களூருக்கு பிற்பகல் 1.45 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் பெங்களூரு- திருச்சி இடையே வரும் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைதோறும்) சிறப்பு ரயில் இயக்கப்படும். பெங்களூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, கிருஷ்ணராஜாபுரம், பங்காருபேட்டை சேலம், நாமக்கல், கரூா், வழியாக திருச்சிக்கு இரவு 10.30 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.