சென்னை எழும்பூா் - திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஏப்ரல் 2-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூா் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (எண்: 06113) மறுநாள் மாலை 6 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கமாக, ஏப்ரல் 5-ஆம் தேதி மாலை 5.15 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (எண்: 06114) மறுநாள் காலை 11.30 மணிக்கு எழும்பூரைச் சென்றடையும்.
இந்த ரயில் கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலம் வழியாக சென்னை- போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் மங்களூரு-சென்னை கோடைக் கால சிறப்பு ரயில்

போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

மங்களூரு-சென்னை எழும்பூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



