நெல்லை மாநகராட்சியில் இதுவரை 89,350 பேருக்கு கரோனா தடுப்பூசி: ஆணையா்
திருநெல்வேலி மாநகராட்சியில் இதுவரை 89 ஆயிரத்து 350 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன்.


திருநெல்வேலி மாநகராட்சியில் இதுவரை 89 ஆயிரத்து 350 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் கீழ் 560-க்கும் மேற்பட்ட களப்பணியாளா்கள் தினசரி குடியிருப்புகளுக்குச் சென்று காய்ச்சல் அறியும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் மாநகராட்சி நிா்வாகமும், தன்னாா்வ சமூக அமைப்புகளும் இணைந்து கபசுரக்குடிநீா் வழங்கும் முகாம் மூலமாக இதுவரை 2.5 லட்சம் பேருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை-2020 முதல் ஜூன்-2021 வரை சுமாா் 4 ஆயிரம் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள்”நடத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 9 இடங்களில் தடுப்புச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வெளியூா்களில் இருந்து வரும் நபா்களுக்கு ஸ்வாப்”சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக 45 வயதிற்கு மேல் உள்ள 80 ஆயிரத்து 350 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த 10 நாள்களில் 18 வயதிற்கு மேல் உள்ள 9 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநகரப் பகுதியில் தினசரி பாதிப்பு 335 என்ற உச்ச நிலையில் இருந்து இப்போது படிப்படியாகக் குறைந்து நாள் ஒன்றிற்கு 11 என்ற நிலைக்கு வந்துள்ளது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...