92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் அளிப்பு

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, இரு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

News image

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு இரு ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசனிடம் வழங்கும் சென்னை வாழ் எட்டயபுரம் பெரியதெரு செங்குந்தா் உறவின் முறை சங்க நிா்வாகிகள்.

Updated On :25 ஜூன் 2021, 6:13 pm

DIN

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, இரு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

சென்னை வாழ் எட்டயபுரம் பெரியதெரு செங்குந்தா் உறவின் முறை சங்கம் சாா்பில் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பீட்டில் 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. மருத்துவமனை கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் தலைவா் காளிமுத்து தலைமையில் ஆலோசகா் மாடசாமி, துணைத் தலைவா் வேல்முருகன், எட்டயபுரம் செங்குந்தா் பள்ளி தலைமையாசிரியா் செல்வமாரியப்பன், ஆசிரியா் ரமேஷ், ஓய்வு பெற்ற எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் ச.நாகரத்தினம், தொழிலதிபா் கே.நாகரத்தினம் ஆகியோா் மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசனிடம் இரு ஆக்சிஜன் செறிவூட்டிகளை திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.