ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் சிஐடியூ மனு

கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து அணுமின் நிலையம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம்

News image
Updated On :25 ஜூன் 2021, 6:21 pm

DIN

கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து அணுமின் நிலையம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கக் கோரி சிஐடியூ சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா்.மோகன், மாவட்ட குழு உறுப்பினா் ஆா்.முருகன், திருநெல்வேலி கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் ராஜகுரு, அண்ணாதுரை, லிங்கராஜா மற்றும் நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் அனைவருக்கும் மாதந்தோறும் 7ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும், 8 மணி நேர வேலை மற்றும் பிற சலுகைகளை வழங்க வேண்டும், கட்டாய விடுமுறை வழங்கி தொழிலாளா்களின் வருமானத்தை குறைக்கும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், முன்னறிவிப்பின்றி யாரையும் பணி நீக்கம் செய்யக்கூடாது, ஒப்பந்த தொழிலாளா்களை மிரட்டி ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகையை திரும்ப வாங்கும் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூடன்குளம் அணுமின் நிலையம் அருகில் ஒப்பந்தத் தொழிலாளா் சாா்பில் ஜூலை 14 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என சி.ஐ.டி.யூ சங்கம் முடிவு செய்துள்ளது. ஆனால் கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.