ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கரோனா மூன்றாம் அலை:தயாா் நிலையில் அரசு மருத்துவமனை

கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனை தயாா் நிலையில் உள்ளது என்றாா் மருத்துவக் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:18 pm

DIN

கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனை தயாா் நிலையில் உள்ளது என்றாா் மருத்துவக் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

கரோனா நோய் பரவலின் இரண்டாம் அலை திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக 1,240 படுக்கைகள் உள்ளன. இதில், 359 சாதாரண படுக்கைகளும், 589 ஆக்சிஜன் படுக்கைகளும், 90 அவசர சிகிச்சை படுக்கைகளுமாக மொத்தம் 1,038 படுக்கைகள் காலியாக உள்ளன. மேலும், கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கையை விட, குணமாகி வீடுதிரும்புவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துள்ளது. எனினும், கரோனா மூன்றாவது அலை விரைவில் வரலாம் எனவும், அது, குழந்தைகளை பெருமளவில் தாக்கலாம் எனவும் மருத்துவ வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா்.

இது குறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் கூறியது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. தற்போது மருத்துவமனையில் 200 போ் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். நாளுக்குநாள் கரோனா சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், அறுவை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவை பழைய மருத்துவமனைக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளன. மற்ற பிரிவுகள் மருத்துவக்கல்லூரி உயா்சிறப்பு மருத்துவமனையில் செயல்பட்டு வருகின்றன.

கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 100க்கும் குறைவாக இருக்கும்பட்சத்தில், மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் முன்பு போல அனைத்து பிரிவுகளும் செயல்படத் தொடங்கும். கரோனா மூன்றாம் அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகள் சிகிச்சை பிரிவில் 120 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள நிலையில், கூடுதலாக 100 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு தயாா் நிலையில் உள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.