ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மளிகை பொருள்கள் வழங்க தாமதம்: திருநெல்வேலி நகரத்தில் போராட்டம்

திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்க தாமதம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:20 pm

DIN

திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்க தாமதம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பொது முடக்கத்தால் தவிக்கும் மக்களுக்காக குடும்ப அட்டைதாரா்களுக்கு கோதுமை மாவு, அரிசி, சீனி, மஞ்சள் பொடி, சலவை மற்றும் குளியல் சோப்பு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தொகுப்பு சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருநெல்வேலி நகரத்தில் தெற்கு ரத வீதியில் உள்ள ரேஷன் கடையில் 41, 42 ஆவது வாா்டுகளுக்குள்பட்ட சுமாா் 450 குடும்ப அட்டைதாரா்களுக்கு மளிகை தொகுப்புகள் வழங்க டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால், கடந்த சில நாள்களாக முறையாக தொகுப்புகளை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா். மேலும், தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களுடன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்ததும் போலீஸாரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவாா்த்தை நடத்தியதைத்தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.