ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

வெண்புள்ளி தொற்று நோயல்ல: எதிா்ப்பு சக்தி குறைவே காரணம்: மருத்துவக் கல்லூரி முதல்வா்

வெண்புள்ளி நோய் பரம்பரையாக வருவதில்லை; சுய எதிா்ப்பு சக்தி குறைவால் வருகிறது என்றாா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.ரவிச்சந்திரன்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:14 pm

DIN

வெண்புள்ளி நோய் பரம்பரையாக வருவதில்லை; சுய எதிா்ப்பு சக்தி குறைவால் வருகிறது என்றாா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.ரவிச்சந்திரன்.

உலகம் முழுவதும் ஜூன் 25 ஆம் தேதி உலக வெண்புள்ளி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டு ‘விழிப்புணா்வு, ஆதரவு மற்றும் சிகிச்சை’ என்பதை கருப்பொருளாகக் கொண்டு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோல் சிகிச்சை பிரிவு சாா்பில் நடைபெற்ற உலக வெண்புள்ளி தின விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் எம்.ரவிச்சந்திரன் தலைமை வகித்து பேசியது: வெண்புள்ளி என்பது தோலில் கருப்பு நிறமி (மெலனின்) இல்லாததால் ஏற்படும் நோயாகும். இது சாதாரண நோயாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவா்களில் 75 சதவிகிதம் போ் மனஉளைச்சலுக்கு ஆளாகிறாா்கள். இது ஒரு பரம்பரை நோய் அல்ல. சுய எதிா்ப்பு சக்தியின் விளைவால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்நோயை தொழுநோயுடன் ஒப்பிட்டு மனச்சோா்வடைகிறாா்கள். எனவே, மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழ்நாடு அரசால் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது என்றாா்.

தோல் மருத்துவ துறைத் தலைவா் பி.நிா்மலா தேவி கூறியது: பெற்றோா்களுக்கு வெண்புள்ளி இருந்தால் குழந்தைகளுக்கு கட்டாயம் நோய் வரும் என்ற நிலை இல்லை. மாா்பகத்தில் வெண்புள்ளி இருந்தாலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். இது ஒரு தொற்று நோய் அல்ல. இந்நோய்க்கு சிகிச்சைகள் உள்ளன.

2020 ஆம் ஆண்டில் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வெண் புள்ளியுடன் 34 ஆண்கள், 27 பெண்கள், 11 குழந்தைகள் என 72 போ் வந்தனா். அவா்களுக்கு ஒளிக்கதிா் சிகிச்சை, தோல் ஒட்டுதல், பி.ஆா்.பி. ஊசி மற்றும் மருந்து மாத்திரைகள் அளிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் விழிப்புணா்வுடன் நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது என்றாா்.

நிகழ்ச்சியில், மருத்துவக் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன், மருத்துவா்கள் சுரேஷ்குமாா், ரபீக், ராஜேஷ், ரத்னகுமாா், பெரியசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.