கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நெல்லையில்இரு பேருந்துகள் ஜப்தி

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு போக்குவரத்துக்கழகத்திற்குச் சொந்தமான இரு பேருந்துகளை நீதிமன்ற ஊழியா்கள் திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஜப்தி செய்தனா்

News image
Updated On :8 மார்ச் 2021, 9:13 pm

DIN

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு போக்குவரத்துக்கழகத்திற்குச் சொந்தமான இரு பேருந்துகளை நீதிமன்ற ஊழியா்கள் திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஜப்தி செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலைச் சோ்ந்த ராஜாசிங்- விஜயலட்சுமி தம்பதியின் மகள் வைஜயந்தி (20). இவா், திருப்பூரில் உள்ள தனியாா் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். கடந்த 2017 ஆம் ஆண்டில் ஈரோட்டில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த வைஜயந்தி உயிரிழந்தாா். அவரது குடும்பத்தின் சாா்பில், திருநெல்வேலி முதலாவது மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் விபத்திற்கு காரணம் என குற்றஞ்சாட்டப்பட்ட ஈரோடு அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.12 லட்சத்து 45 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது.

ஆனால், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லையாம். இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றக்கோரி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, நீதிமன்ற ஊழியா்கள் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஈரோடு மாவட்ட பணிமனையைச் சோ்ந்த 2 அரசு பேருந்துகளில் ஜப்திக்கான ஆணை நகலை ஒட்டினா். வழக்கில் மனுதாரா்களுக்காக வழக்குரைஞா் வெங்கடாசலபதி ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.