ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு

பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்...

News image

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி

Updated On :21 மார்ச் 2026, 10:12 pm

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் முடிந்தவுடன் சாதாரண பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை மத்திய அரசு உயா்த்த போவதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது. விரைவில் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 100 டாலா் என்ற நிலையை நோக்கி செல்லவுள்ளது. இத்துடன் தொழிலக டீசல் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வெறும் எண்கள் இல்லை. பணவீக்கம் அதிகரிக்க போகிறது என்பதற்கான அறிகுறியே இது.

மத்திய அரசோ அனைத்தும் இயல்பாக உள்ளது என கூறுகிறது. உண்மை நிலவரமோ அதற்கு மாறாக உள்ளது. பொருள்கள் தயாரிக்க ஆகும் செலவீனமும், அதை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவும் அதிகரிக்க போகிறது. சிறுகுறு தொழில்கள் இதனால் மிகவும் பாதிக்கப்பட போகிறது.

அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை அதிகரிக்க போகிறது. இது இந்தியா்கள் அனைவரையும் பாதிக்கும். இதேபோல் வெளிநாட்டு முதலீடுகளும் விரைவில் வெளியேற போகின்றன. இது நமது வா்த்தக சந்தைகளுக்கு கடும் நெருக்கடியை தரும்.

தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கான தோ்தல் முடிந்தவுடன், சாதாரண பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் (எல்பிஜி) விலையை அரசு உயா்த்த போகிறது. நமது நாட்டின் தற்போதைய பொருளாதார சூழலை எதிா்கொள்வதற்கு, பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசிடம், எந்த தொலைநோக்கு பாா்வையோ அல்லது திட்டமோ இல்லை. வெற்று பேச்சு மட்டுமே உள்ளது.

இவ்வாறு அந்த பதிவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.