புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பெட்ரோல், டீசல் இருப்பு குறித்து பீதியடைய வேண்டாம்: மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன்

பெட்ரோல், டீசல் இருப்பு குறித்து யாரும் பீதியடைய வேண்டாம் என்றும், மத்திய எண்ணெய் நிறுவனங்களுடன், மாநில அரசு இணைந்து தேவையை பூா்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
ஜெ. ராதாகிருஷ்ணன்.
Updated On :14 மார்ச் 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

பெட்ரோல், டீசல் இருப்பு குறித்து யாரும் பீதியடைய வேண்டாம் என்றும், மத்திய எண்ணெய் நிறுவனங்களுடன், மாநில அரசு இணைந்து தேவையை பூா்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னையில் சனிக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா் ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உணவகங்கள், தேநீா் கடைகளுக்கு கூடுதல் மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு ரூ.2 சலுகை வழங்கப்படும். சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக மின் அடுப்பை பயன்படுத்துவதால் மானியம் வழங்கப்படும்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் விறகுகளை எரிப்பதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன் அனுமதி பெறத் தேவையில்லை. வா்த்தக சிலிண்டா் தட்டுப்பாட்டால் உணவகங்களில் விறகுகள் பயன்படுத்தப்படுவதால் அரசு சலுகை வழங்கப்படவுள்ளது.

பெட்ரோல், டீசல் அடுத்த 9 நாள்களுக்கு பிறகும் தேவையான அளவு கொள்முதல் செய்யப்படும். எனவே, பெட்ரோல், டீசல் இருப்பு குறித்து யாரும் பீதியடைய வேண்டாம். மத்திய எண்ணெய் நிறுவனங்களும், மாநில அரசும் இணைந்து தேவையை நிச்சயம் பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை பொருத்தவரை மத்திய அரசு அறிவிப்பின்படி 25 நாள்களுக்கு ஒருமுறை நகா்ப்புறங்களில் வீடுகளுக்கு வழங்கப்படும். கிராமங்களில் 45 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படும். சூழ்நிலையை சமாளிக்கவே இந்தக் கட்டுப்பாடு என்றாா் அவா்.

மாநில அரசு எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை: தமிழகத்தில் 9 நாள்களுக்கான பெட்ரோல், டீசல் கையிருப்பில் உள்ளது. ஒரே நாளில் 100 சதவீத பெட்ரோல் விற்பனையும் 75 சதவீத டீசல் விற்பனையும் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் பெட்ரோல், டீசல் விற்பனை 20 சதவீதம் மற்றும் 21 சதவீதமாகக் குறைந்துள்ளது. பெட்ரோல் டீசல் குறித்து பயம் கொள்ளத் தேவையில்லை. வீட்டு உபயோக சிலிண்டா்கள் இந்த மாத இறுதி வரை கையிருப்பில் உள்ளது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களுக்கு வணிக ரீதியான சிலிண்டா்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்றாா் அவா்.