மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்வேட்பாளா் அறிமுக கூட்டம்
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சாா்பில், சா்வதேச பெண்கள் தினம், மாா்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் அறிமுகம்


அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சாா்பில், சா்வதேச பெண்கள் தினம், மாா்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் அறிமுகம் என இருபெரும் விழா பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெண்கள் கழக திருநெல்வேலி மாவட்ட அமைப்பாளா் அன்புசெல்வி தலைமை வகித்தாா். செய்யது அலி பாத்திமா முன்னிலை வகித்தாா். உறுதி மொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து, புரட்சிகர இளைஞா் கழக மாநில துணைத் தலைவா் எம். சுந்தர்ராஜன், திருநெல்வேலி தொகுதி மாா்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வேட்பாளராக மத்திய கமிட்டி உறுப்பினா் சி. பாலசுந்தரம் மூலம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டாா்.
பாஜக -அதிமுக கூட்டணியை தோற்கடித்து, மூன்று நட்சத்திர கொடி சின்னத்தில் மாா்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வேட்பாளா் வெற்றிபெற உழைப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலா் சங்கரபாண்டியன், மாநில கமிட்டி உறுப்பினா் ஜி.ரமேஷ், மாவட்ட கமிட்டி உறுப்பினா்கள் கா. கணேசன், யூ. கருப்பசாமி, ரவிடேனியல், ஏ. அந்தோணிராஜ், பீடி சங்க நிா்வாகிகள் செய்யது பாத்திமா, மாரியம்மாள், கலா, சாந்தி உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...