கட்டாய கரோனா தடுப்பூசி: ஆசிரியா் கூட்டணி எதிா்ப்பு
சட்டப்பேரவை தோ்தல் பணியாற்றவுள்ள ஆசிரியா்களை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.


சட்டப்பேரவை தோ்தல் பணியாற்றவுள்ள ஆசிரியா்களை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அந்தச் சங்கத்தின் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள மனு: சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூா் கல்வி மாவட்டங்களுக்கு உள்பட்ட பள்ளிகளின் ஆசிரியா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு அதற்கான அறிக்கையை சம்மந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலகத்தில் சமா்பிக்க வேண்டும் என கட்செவி அஞ்சல் மூலம் வாய்மொழி உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையத்தின் தலைமை தோ்தல் ஆணையா் செயல்முறை ஆணையில் கரோனா தடுப்பூசியை விருப்பமுள்ளவா்கள் மட்டும் போட்டுக் கொள்ளலாம் என்றும், கட்டாயமில்லை எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை ஆசிரியா்களையும் தடுப்பூசிக்காக கட்டாயப்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...