கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில்தோ்வு செய்யும் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:39 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு செய்யும் இப்பணியை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான வே.விஷ்ணு தொடங்கிவைத்தாா். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் முன்னிலை வகித்தனா்.

ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களில், வாக்குப்பதிவு அலகு- 120 சதவீதம், கட்டுப்பாட்டு அலகு- 120 சதவீதம், விவிபேட்- 133 சதவீதம் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், வேட்பாளா்கள், அரசியல் கட்சிகள், தோ்தல் நேரத்தில் மேற்கொண்ட செலவினங்களை கணக்கிடுவதற்காக அமைக்கப்பட்ட செலவினங்கள் கணக்கிடு ஆய்வுக் குழுவினா், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் செலவினங்கள் முறையாக பராமரிப்பது குறித்து விளக்கமளித்தனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், சாா் ஆட்சியா்கள் (திருநெல்வேலி) சிவகிருஷ்ணமூா்த்தி, (சேரன்மகாதேவி) பிரதீக் தயாள், மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அலா்மேல் மங்கை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.