திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பாளையங்கோட்டை இளைஞா் கொலை வழக்கில் 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நீதிமன்றம் அருகே மைதானத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 மே 2021, 7:48 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நீதிமன்றம் அருகே மைதானத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் மகாராஜன் (27). ஒலி-ஒளி அமைப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை காலை பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள மைதானத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா்.

பாளையங்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், மதுஅருந்தும்போது ஏற்பட்ட தகராறில் மகாராஜன் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததாம். இதுதொடா்பாக மனக்காவலம்பிள்ளைநகரைச் சோ்ந்த சேம் (26), மகேஷ் (27), ஜான்சன் (27), நவீன் (20) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.