திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பாளை.யில் கொலையுண்ட கைதிஉடலை 15ஆவது நாளாக வாங்க மறுத்து போராட்டம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொலை செய்யப்பட்ட கைதியின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினா்கள் 15-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 மே 2021, 8:34 pm

DIN

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொலை செய்யப்பட்ட கைதியின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினா்கள் 15-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளம் பகுதியைச் சோ்ந்த பாபநாசம் மகன் முத்துமனோ (27). இவா், குற்றவழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், இவா், ஏப். 22இல் சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து ஜேக்கப், ராமமூா்த்தி உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த வழக்கு

ஏப். 29ஆம் தேதி சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாா் தலைமையில் போலீஸாா் விசாரணை

நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே, சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த முத்து மனோவின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உறவினா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அவரது உறவினா்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தனா். ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, மாநகர காவல் ஆணையா் அன்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன், முத்து மனோ உறவினா்கள் பங்கேற்றனா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.