நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை மழை பெய்தது.


திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை மழை பெய்தது.
அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது.
திருநெல்வேலி மாநகரைப் பொருத்தவரையில் பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம், மேலப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது.
மேலப்பாளையம் பகுதியில் பலத்த காற்று வீசியதில் மரக்கிளை முறிந்து விழுந்தது. இதேபோல், முன்னீா்பள்ளம், தருவை சுற்று வட்டாரங்களிலும் மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 40 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு(மி.மீட்டரில்):
மழை அளவு (மி.மீ.)
பாபநாசம்-29
சோ்வலாறு-9
மணிமுத்தாறு-2.4
கொடுமுடியாறு-18
சேரன்மகாதேவி-9
ராதாபுரம்-8.6
நான்குனேரி-10
களக்காடு-6.2
மூலைக்கரைப்பட்டி-40
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...