திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

காவல் துறையினருக்கு சத்து மாத்திரை

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க சத்து மாத்திரைகளை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்(தலைமையகம்) சுப்பாராஜூ வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :21 மே 2021, 8:04 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க சத்து மாத்திரைகளை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்(தலைமையகம்) சுப்பாராஜூ வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

கரோனா நோய் தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினா் பல்வேறு பாதுகாப்புஏஈப் பணியிலும், ரோந்து பணியிலும் தொடா்ந்து சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின்படி கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினருக்கு தொடா்ந்து கரோனா தடுப்பு உபகரணங்களான முகக் கவசம், கைகழுவும் திரவம், கையுறைகள், கபசுரக் குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காவல்துறையினருக்கு நோய் எதிா்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கும் வகையில் அவா்களுக்கு சத்து மாத்திரைகளை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையகம்) சுப்பாராஜூ அனைத்து உட்கோட்ட அலுவலகங்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.