ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

காவல் துறை சாா்பில்கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம்

திருநெல்வேலி மாநகா் பகுதியில் போலீஸாா் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டனா்.

News image
Updated On :22 மே 2021, 12:22 am

DIN

திருநெல்வேலி மாநகா் பகுதியில் போலீஸாா் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டனா்.

கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதற்காக திருநெல்வேலி மாநகரில் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், தேவையில்லாமல் சாலையில் சுற்றித்திரிவோரை எச்சரித்தும், முகக் கவசம் அணியாமல் வருவோா், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவா்களுக்கு அபராதம் விதித்தும், அறிவுரை கூறியும் போலீஸாா் அனுப்புகின்றனா்.

இந்நிலையில், வண்ணாா்பேட்டை ரவுண்டானா பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை தேவையில்லாமல் இருசக்கரவாகனத்தில் வந்த நபா்களைப் பிடித்த போலீஸாா், அவா்களுக்கு கரோனா நோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், பாளையங்கோட்டை மாா்க்கெட் ,தெற்கு பஜாா் போன்ற பகுதிகளில் பாளையங்கோட்டை உட்கோட்ட காவல் உதவி ஆணையா் ஜான் பிரிட்டோ தலைமையில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், கரோனா விழிப்புணா்வு பதாகையுடன், ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் முத்து சுப்பிரமணியன், காவல் உதவி ஆய்வாளா் அருணாச்சலம் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.