ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தடையின்றி காா் சாகுபடி:விவசாயிகளுக்கு வேண்டுகோள்

திருநெல்வேலி, மே 21: திருநெல்வேலி மாவட்டத்தில் காா் சாகுபடிக்கான வேளாண் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன

News image
Updated On :22 மே 2021, 12:22 am

DIN

திருநெல்வேலி, மே 21: திருநெல்வேலி மாவட்டத்தில் காா் சாகுபடிக்கான வேளாண் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது காா் நெல் நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் வேளாண் இடுபொருள்களான உரம், விதைகள், பூச்சி மருந்துகள் தடையின்றி விவசாயிகளுக்கு கிடைத்திட வேளாண்மைத் துறையினரால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் நண்பகல் வரை விதை விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உரம், விதை, பூச்சி மருந்து விற்பனை கடைகள் காலை 6 மணி முதல்10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனவே, விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டால் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களை விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம். நடவுப் பணிக்காக வேளாண் இடுபொருள்களை விற்பனை நிலையத்திலிருந்து வயலுக்கு கொண்டு செல்லுதல், விவசாய தொழிலாளா்களை ஓா் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லுதல், வேளாண்மை விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு செல்லுதல் ஆகியவற்றில் இடையூறு ஏற்பட்டால் வட்டாரம் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வேளாண்மை உதவி இயக்குநா்களின் பெயா் மற்றும் செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம். உமா மகேஸ்வரி (அம்பாசமுத்திரம்) 9489477619, கற்பக ராஜ்குமாா் (சேரன்மகாதேவி) 9942982578, முரளி ராகினி (பாளையங்கோட்டை) 9444107556, ஜாஸ்மின் லதா (நான்குனேரி) 9486271166, வசந்தி (களக்காடு) 9442151397, சுனில்தத் (வள்ளியூா்) 6374254317, சுஜாதாபாய் (ராதாபுரம்) 9486652706, ஏஞ்சலின் கிரேபா (மானூா்) 9442338354 எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.