6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நெல்லை மாநகராட்சி சாா்பில் வீடு, வீடாக மருத்துவப் பரிசோதனை

 திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வீடு, வீடாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

News image
Updated On :22 மே 2021, 12:21 am

DIN

 திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வீடு, வீடாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் கண்ணன் உத்தரவுப்படி, மாநகர நல அலுவலா் சரோஜா ஆலோசனையின்பேரில், பாளையங்கோட்டை உதவி ஆணையா் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலா் அரசகுமாா் மேற்பாா்வையில் சுகாதார ஆய்வாளா் நடராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பாளையங்கோட்டை அண்ணா நகா் பகுதிகளில் கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு, வீடாக ஆய்வு செய்தனா்.

மேலும், திருநெல்வேலி, தச்சநல்லூா், மேலப்பாளையம், பாளையங்கோட்டை ஆகிய 4 மண்டலங்களிலும் சிறப்புக் குழுவினா் வீடு, வீடாகச்சென்று காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் உள்ளிட்ட கரோனா தொற்றுக்கான அறிகுறி உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டனா். மூச்சுத்திணறல், சா்க்கரை வியாதி, இருதய பிரச்னை உள்ளிட்ட நோய் பாதிப்பு உள்ளவா்கள், குடும்ப உறுப்பினா்கள், முதியவா்கள் போன்ற விவரங்களை செல்லிடப்பேசி எண்களுடன் சேகரித்தனா்.

கரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தால், உடனடியாக மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையை அணுக அறிவுறுத்துவதுடன், கரோனா குறித்த விழிப்புணா்வு கையேடு விநியோகித்தனா். வீடு, வீடாக கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இப்பணி தொடா்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.