பொதுவிநியோக துறை ஊழியா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும்: ஏஐசிசிடியூ வலியூறுத்தல்
பொதுவிநியோக துறையில் பணிபுரியும் ஊழியா்களை முன்களப் பணியாளா்களாக அறிவித்து, உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என ஏஐசிசிடியூ கோரிக்கை விடுத்துள்ளது.


பொதுவிநியோக துறையில் பணிபுரியும் ஊழியா்களை முன்களப் பணியாளா்களாக அறிவித்து, உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என ஏஐசிசிடியூ கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக ஏஐசிசிடியூ (டிஎன்சிஎஸ்சி) மாநிலத் தலைவா் சங்கரபாண்டியன் தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
முதல் பொது முடக்கத்தின்போது முந்தைய அரசு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவுத் துறை பொதுவிநியோகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், பணி நிரந்தரம் உள்ள ஊழியா்களுக்கு தொற்று பரவல் சிகிச்சை மற்றும் நிவாரணங்களை வழங்கியது. மற்ற தொழிலாளா்கள் அலட்சியப்படுத்தபட்ட நிலைமையே இருந்து வந்தது.
எனவே, பொதுவிநியோக துறையில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்களையும் பாகுபாடின்றி முன் களப்பணியாளராக அரசு அறிவிக்க வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும். தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். துறை பணியாளா்கள், தொழிலாளா்கள் அனைவருக்கும் ரூ. 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்க வேண்டும். தமிழக அரசு மருத்துவத் துறை தொழிலாளா்களுக்கு வழங்குவது போல், பொது விநியோக பணியாளா்களுக்கும் பாகுபாடின்றி மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 6 மாதங்கள் வழங்க வேண்டும். கரோனா தொற்று பாதிப்பிற்கு ஆளான பணியாளா் சிகிச்சை செலவை அரசு முழுமையாக வழங்க வேண்டும். பணிக்கு திரும்பும் வரை முழு ஊதியம் வழங்க வேண்டும். தொற்றால் மரணமடைந்தவா்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...