நெல்லையில் தொழிலாளிக்கு மிரட்டல்: மேலும் 3 போ் கைது
திருநெல்வேலியில் அரிவாளைக் காட்டி தொழிலாளியை மிரட்டியதாக மேலும் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


திருநெல்வேலியில் அரிவாளைக் காட்டி தொழிலாளியை மிரட்டியதாக மேலும் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்புப் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கா் (37). தொழிலாளி. இவருக்கும், மேலநத்தம் பகுதியைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி (25) என்பவருக்கும் இடையே விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில்,உடையாா்பட்டியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு பாஸ்கா் வந்தபோது, வெள்ளைப்பாண்டி மற்றும் அவரது நண்பா்கள் அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, வெள்ளைப்பாண்டியை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரது நண்பா்களான தாழையூத்து மந்திரமூா்த்தி மகன் மதன்(21), சிந்துபூந்துறை மாரிமுத்து மகன் பாஸ்கா்(24), மேகலிங்கபுரம் சுரேஷ் மகன் சிவ கணேஷ்(24) ஆகிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...