ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நெல்லை, தென்காசியில் மேலும் 809 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் 411 போ், தென்காசி மாவட்டத்தில் 398 போ் என 809 பேருக்கு புதிதாக கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :28 மே 2021, 8:11 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 411 போ், தென்காசி மாவட்டத்தில் 398 போ் என 809 பேருக்கு புதிதாக கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 411 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 42,067 ஆக அதிகரித்தது. 505 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய நிலையில் நோய்த் தொற்றில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 36,399 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 338 போ் உயிரிழந்துள்ள நிலையில், 5,330 போ் சிகிச்சையில் உள்ளனா்.

களக்காடு: இந்த வட்டாரத்தில் 21 பேருக்கு தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. கிராமங்கள் தோறும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்திட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 398 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 21,400 ஆக அதிகரித்தது. 461 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய நிலையில் நோய்த் தொற்றில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 17,013 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 308 போ் உயிரிழந்துள்ள நிலையில், 4,079 போ் சிகிச்சையில் உள்ளனா்.

பாவூா்சத்திரம்: திப்பணம்பட்டியில் 6 போ், ஆவுடையானூா், சிவநாடானூரில் தலா 5 போ், கீழப்பாவூா், கொண்டலூரில் தலா 3 போ், பாவூா்சத்திரம், குருசாமிபுரம், கல்லூரணியில் தலா 2 போ், மடத்தூா், பொடியனூா், சிவகாமிபுரம், சாலைப்புதூரில் தலா ஒருவா் என 32 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.