6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

காவலா்கள் குடும்பத்திற்கு தடுப்பூசி

திருநெல்வேலியில் காவலா் குடும்பங்களுக்கான தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2021, 8:10 pm

DIN

திருநெல்வேலியில் காவலா் குடும்பங்களுக்கான தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர காவல் துறையை சோ்ந்த குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் (பொறுப்பு) பிரவீன் குமாா் அபிநபு தொடங்கி வைத்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன், மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்- ஒழுங்கு) சீனிவாசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாவட்டத்தில் தடுப்பூசி போடாத காவல்துறையினா், காவல்துறையினரின் குடும்பங்கள், அமைச்சுப் பணியாளா்கள் மற்றும் சிறப்பு பிரிவு காவலா்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மருத்துவா் தமிழரசி தலைமையிலான குழுவினா் தடுப்பூசி செலுத்தினா்.

பயக28டஞகஐஇஉ: பாளையங்கோட்டையில் காவலா் குடும்பங்களுக்கு நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.