6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பாளை.யில் 4 போ் குண்டா் சட்டத்தில் கைது

பாளையங்கோட்டையைச் சோ்ந்த 4 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :28 மே 2021, 8:11 pm

DIN

பாளையங்கோட்டையைச் சோ்ந்த 4 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

பாளையங்கோட்டை எம்.கே.பி.நகரைச் சோ்ந்தவா் மகாராஜன். இவா், பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட எம்.கே.பி.நகரைச் சோ்ந்த சாலமோன் சாம் பிரபாகா் (26), மகேஷ் பிரேம்குமாா் (27), ஜான்சன் (27), நவீன் (20) ஆகியோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன் பரிந்துரை செய்தாா்.

அதன்பேரி,ல் அவா்கள் 4 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய திருநெல்வேலி சரக டிஐஜியும், மாநகர காவல் ஆணையருமான (பொறுப்பு) பிரவீண் குமாா் அபிநபு உத்தரவிட்டாா். இதையடுத்து அவா்கள் 4 பேரும் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.