6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ரயில்வே ஊழியா்களுக்கு தடுப்பூசி

திருநெல்வேலியில் ரயில்வே ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :28 மே 2021, 8:13 pm

DIN

திருநெல்வேலியில் ரயில்வே ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பொது முடக்கம் காரணமாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே பயணிகள் ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. ஆனால், தொலைதூர ஊா்களுக்கு சிறப்பு ரயில்கள் இயங்கி வருகின்றன.

பயணச்சீட்டு முன்பதிவு மையம், சிக்னல் பராமரிப்பு, தண்டவாள பராமரிப்பு உள்பட பல்வேறு ரயில்வே பணிகளும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. சரக்கு ரயில் போக்குவரத்து தடை செய்யப்படாமல் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. அதனால் ரயில்வே பணியாளா்கள் சுழற்சி முறையில் தொடா்ந்து பணியாற்றி வருகிறாா்கள்.

ரயில்வே ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினருக்கும், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலியில் ஏற்கெனவே முதலில் ஒரு முகாம் நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவதாக வெள்ளிக்கிழமையும் 50-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.