பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

பணகுடியில் நீா்வழிக் கால்வாயை ஆக்கிரமித்து அணுகுசாலை: விவசாயிகள் எதிா்ப்பால் பணி நிறுத்தம்

பணகுடியில் நீா்வழிக் கால்வாயை ஆக்கிரமித்து அணுகுசாலை அமைக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:56 pm

DIN

பணகுடியில் நீா்வழிக் கால்வாயை ஆக்கிரமித்து அணுகுசாலை அமைக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து சாலைப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

பணகுடியில் புறவழிச்சாலையில் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் ரூ.56 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 80 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், அணுகுசாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக ஆலந்துறையாற்றின் நீா்வழிக்கால்வாயை ஆக்கிரமித்து, கால்வாயின் அகலத்தை குறைத்துள்ளனா். இதனால் கடந்த சில நாள்களாக பணகுடி பகுதியில் பெய்த கனமழையால் கால்வாயில் தண்ணீா் செல்லமுடியாமல் நெடுஞ்சாலை வழியாக தண்ணீா் பெருக்கெடுத்து சென்றது. இதையடுத்து இந்தக் கால்வாய் மூலம் பாசன வசதி பெறக்கூடிய காளிபுதுக்குளம், விநாயகா் புதுக்குளம், பெருமாள் புதுக்குளம் ஆகிய குளங்களுக்கு நீா்வரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து இந்தக் குளங்களைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் அனுமன்நதி மீட்புக் குழுவினா் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து வடக்கன்குளம் பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் சுபாஷ், சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து நீா்வழிக் கால்வாய் ஆக்கிரமிப்பை கைவிடுமாறும், நீா்வழிக்கால்வாய் குறித்த சரியான முடிவு ஏற்படும் வரையில் சாலைப் பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறும் கேட்டுக்கொண்டாா். இதையடுத்து சாலைப் பணி நிறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.