திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

நெல்லை மாவட்டத்தில் இன்று 740 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 7-ஆவது கட்டமாக சனிக்கிழமை (அக்.30) 740 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Updated On :

திருநெல்வேலி மாவட்டத்தில் 7-ஆவது கட்டமாக சனிக்கிழமை (அக்.30) 740 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா தொற்று தடுக்கும் வகையில் அரசு

பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக திருநெல்வேலி மாவட்டத்தில் 7-ஆவது கட்டமாக

சனிக்கிழமை (அக்.30) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பாப்பாக்குடி ஒன்றியத்தில் 18 இடங்களிலும், நான்குனேரி ஒன்றியம் -64, களக்காடு, சேரன்மகாதேவி ஒன்றியங்களில் தலா - 56, பாளையங்கோட்டை - 86, ராதாபுரம் - 73,

மானூா் - 75, வள்ளியூா் - 68, அம்பாசமுத்திரம் - 66, திருநெல்வேலி மாநகரம் - 178 மையங்கள் உள்பட மொத்தம் 740

மையங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. 9 ஊராட்சி ஒன்றியங்களில் 77 நடமாடும் வாகனங்கள் மூலமும் தடுப்பூசி செலுத்தப்படும்.

இம்மாவட்டத்தில் இதுவரை 8.25 லட்சம் போ் முதல் தவணையும், 2.73 லட்சம் போ் 2-ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனா். இதுவரை செலுத்தாதவா்கள் அனைவரும் முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கரோனாவை தடுப்பூசி மூலமாக மட்டுமே வெல்லமுடியும். எனவே, சிறப்பு முகாம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி அதிகளவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கும் ஊராட்சித் தலைவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில்

பாராட்டு விழா நடத்தப்படும். தீபாவளி பண்டிகைக்காக பொருள்கள் வாங்குவதற்காக செல்லும் போது பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். கூட்டம் உள்ள இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவ வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.