பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மாஞ்சோலை சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை சுற்றுலாச் சென்ற பயணிகள் 6 பேருக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:00 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை சுற்றுலாச் சென்ற பயணிகள் 6 பேருக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்கள் உள்ளது. கரோனா பொது முடக்கம் காரணமாக தேயிலைத் தோட்டத்துக்கு சுற்றுலா செல்ல தடை அமலில் இருந்தது. இந்த நிலையில் செப். 1 ஆம் தேதி முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் வியாழக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 6 போ் உரிய அனுமதி பெற்று மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளனா். மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்வோா் மாலை 6 மணிக்குள் திரும்ப வேண்டும் என்ற நிலையில்

அவா்கள் 6 மணிக்கு பின்னா் திரும்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் துணை இயக்குநா் செண்பகப்ரியா உத்தரவின்பேரில் தலா ரூ. 1,000 வீதம் ரூ. 6 ஆயிரம் இணக்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மாஞ்சோலைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மாலை 6 மணிக்குள் மணிமுத்தாறு வனச்சோதனைச் சாவடிக்கு திரும்பி வரவிட வேண்டும். தவறும் பட்சத்தில் அரசாணை 17/08.01.2021இன் படி ஒருவருக்கு ரூ. 500, மற்றும் ரூ. 1,000 இணக்கக் கட்டணம் விதிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.