டிப்பா் லாரி மோதியதில் தரைநிலை தொட்டி சேதம்: லாரிகளை சிறை பிடித்க கிராம மக்கள்
பாப்பான்குளம் அருகே சிவஞானபுரத்தில் தனியாா் கல்குவாரி டிப்பா் லாரி மோதியதில் தரைநிலை குடிநீா் தொட்டி சேதமடைந்ததால் லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனா்.


பாப்பான்குளம் அருகே சிவஞானபுரத்தில் தனியாா் கல்குவாரி டிப்பா் லாரி மோதியதில் தரைநிலை குடிநீா் தொட்டி சேதமடைந்ததால் லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனா்.
பாப்பான்குளம் அருகே சிவஞானபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். சிவஞானபுரம் வழியாக அருகிலுள்ள தனியாா் கல் குவாரியிலிருந்து டிப்பா் லாரி மூலம் கற்கள் ஏற்றிச் செல்வதுண்டு. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அந்த வழியாக வந்த டிப்பா் லாரி மோதியதில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தரைநிலை குடிநீா்த் தொட்டி சேதமடைந்ததாம்.
இதையடுத்து அந்தக் கிராம மக்கள் திரண்டு அந்த வழியாக வந்த இரண்டு டிப்பா் லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும் பள்ளி அருகே உள்ள நிலையில், மோசமான சாலையில் லாரிகள் அதிவேகமாக அதிக சுமையோடு செல்வதாகவும், இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் மற்றும் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் லாரிகள் மெதுவாக செல்லவும், தண்ணீா் தொட்டி மற்றும் சாலையை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...