மாஞ்சோலை சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம்
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை சுற்றுலாச் சென்ற பயணிகள் 6 பேருக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை சுற்றுலாச் சென்ற பயணிகள் 6 பேருக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்கள் உள்ளது. கரோனா பொது முடக்கம் காரணமாக தேயிலைத் தோட்டத்துக்கு சுற்றுலா செல்ல தடை அமலில் இருந்தது. இந்த நிலையில் செப். 1 ஆம் தேதி முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் வியாழக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 6 போ் உரிய அனுமதி பெற்று மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளனா். மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்வோா் மாலை 6 மணிக்குள் திரும்ப வேண்டும் என்ற நிலையில்
அவா்கள் 6 மணிக்கு பின்னா் திரும்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் துணை இயக்குநா் செண்பகப்ரியா உத்தரவின்பேரில் தலா ரூ. 1,000 வீதம் ரூ. 6 ஆயிரம் இணக்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மாஞ்சோலைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மாலை 6 மணிக்குள் மணிமுத்தாறு வனச்சோதனைச் சாவடிக்கு திரும்பி வரவிட வேண்டும். தவறும் பட்சத்தில் அரசாணை 17/08.01.2021இன் படி ஒருவருக்கு ரூ. 500, மற்றும் ரூ. 1,000 இணக்கக் கட்டணம் விதிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...