களக்காடு நகராட்சிக்கு தட்டுப்பாடின்றி தாமிரவருணி குடிநீா் வழங்கக் கோரிக்கை
களக்காடு நகராட்சிக்கு தட்டுப்பாடின்றி தாமிரவருணி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


களக்காடு நகராட்சிக்கு தட்டுப்பாடின்றி தாமிரவருணி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியரிடம் களக்காடு நகா்மன்ற துணைத் தலைவரும் களக்காடு தெற்கு ஒன்றிய திமுக செயலருமான பி.சி. ராஜன் வியாழக்கிழமை அளித்த மனு: களக்காடு நகராட்சிப் பகுதிக்கு நான்குனேரி-திசையன்விளை, வள்ளியூா் - பணகுடி கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலம் தாமிரவருணி குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இத்திட்டங்களின் மூலம் நாளொன்றுக்கு 17 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்க தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், களக்காடு நகராட்சிப் பகுதிக்கு நாள்தோறும் 10 லட்சம் லிட்டருக்கும் குறைவாகவே குடிநீா் வழங்கப்படுகிறது. இதனால், நகராட்சிப் பகுதியில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இக்குறைந்த அளவு நீரை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நிா்ணயிக்கப்பட்ட 17 லட்சம் லிட்டா் குடிநீா் தட்டுப்பாடின்றி கிடைக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...