‘மாநகராட்சி பொதுசேவைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்’
திருநெல்வேலி மாநகராட்சியில் பொது சேவைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் அறிவுறுத்தியுள்ளாா்.


திருநெல்வேலி மாநகராட்சியில் பொது சேவைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சியில், புதிய குடிநீா் இணைப்புக்கான கட்டணம், திரைப்பட படப்பிடிப்புக்கான விண்ணப்பம், தொழிற்சாலைகளுக்கான குடிநீா், பாதாளச்சாக்கடை இணைப்பு முதலான தடையில்லாச் சான்று, சுகாதாரச் சான்று, கட்டட அனுமதி பணிக்கான முன்னேற்றம், கட்டட அனுமதி இறுதி கட்டப் பணி முன்னேற்ற அறிக்கை, வரி மதிப்பீட்டு நிறைவு அறிக்கை, மனைப்பிரிவு அங்கீகாரக் கட்டணம், மனைப்பிரிவு அங்கீகாரம் கோருதல், கட்டட வேலை தொடங்குவதற்கான அறிவிப்பு, கட்டடத்தை இடிக்க அனுமதி, கட்டட அனுமதிக்கான கட்டட உரிமக்கட்டணம், கட்டட வரைப்படம் புதுப்பித்தல் கோரிக்கை மற்றும் கட்டணம், இயந்திர உரிமத்திற்கான கோரிக்கை, சொத்து வரி விதிப்பின் தொகுப்பு விவரம், வரிவிதிப்பு விவரம், புதிய தொழில் வரி விதிப்புக்கான கோரிக்கை, தொழில்வரி விதிப்புக்கான வருமான விவரம் சமா்ப்பித்தல், பிறப்பு - இறப்பு குறித்த சான்றிதழ்கள், சாலை துண்டிப்பு அனுமதி உள்ளிட்ட பொது சேவைகள் மின்னனு முறையில் வழங்கப்படுகிறது.
எனவே, இத்தகைய சேவைகளுக்கு இணையதளத்தின் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...