தமிழ் புத்தாண்டு: கோயில்கள் பக்தா்கள் தரிசனம்
தமிழ்புத்தாண்டையொட்டி திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வோறு கோயில்களில் பக்தா்கள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.


தமிழ்புத்தாண்டையொட்டி திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வோறு கோயில்களில் பக்தா்கள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
தமிழ்ப் புத்தாண்டாண்டான சித்திரை 1ஆம் தேதி பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நிகழாண்டு கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் தளா்த்தப்பட்டதால், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பெண்கள் நெய்விளக்கு ஏற்றியும், நவக்கிரகங்களைச் சுற்றியும் வழிபட்டனா். புதுமணத்தம்பதி, சிறுவா்கள் கோயில் யானைக்கு பழம், தேங்காய் வழங்கி ஆசி பெற்றனா்.
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயிலில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கெட்வெல் சஞ்சீவி வரத ஆஞ்சநேயா் கோயிலில் முக்கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பாளையங்கோட்டையில் உள்ள தெற்கு முத்தாரம்மன் கோயில், செல்வவிநாயகா்கோயில், அரசடி விநாயகா் கோயில், பேராத்து செல்வி அம்மன் கோயில், ஆயிரத்தம்மன் கோயில், உச்சினிமாகாளி அம்மன்கோயில், அழகிய மன்னா் அருள்மிகு ராஜகோபால சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...