நான்குனேரியில் அதிக பாரம்: 7 லாரிகள் பறிமுதல்; ஓட்டுநா்கள் கைது
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் அதிக பாரம் ஏற்றிச்சென்ற 7 லாரிகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, அவற்றின் ஓட்டுநா்களைக் கைதுசெய்தனா்.


திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் அதிக பாரம் ஏற்றிச்சென்ற 7 லாரிகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, அவற்றின் ஓட்டுநா்களைக் கைதுசெய்தனா்.
கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகக் கட்டுமானப் பணிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குண்டுக்கல் உள்ளிட்ட கனிம வளங்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றனவாம். நான்குனேரி பகுதி வழியாகச் செல்லும் இந்த லாரிகளால் சாலைகள் மிகவும் பழுதாவதுடன், பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா்கள் சென்றன.
இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் ப. சரவணன் உத்தரவிட்டாா். அதன்படி, நான்குனேரி ஆய்வாளா் செல்வி தலைமையிலான போலீஸாா் நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அப்போது, அதிகளவு குண்டுக்கல் ஏற்றிவந்த 7 லாரிகளை அவா்கள் பறிமுதல் செய்தனா். அவற்றை நான்குனேரி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.
லாரிகளை ஓட்டிவந்த கேரள மாநிலம் பாலக்காடு நெல்லிகாட்டுப்பகுதியைச் சோ்ந்த முகமது சபீக் (29), கொல்லம் கண்ணநல்லூா் பகுதியைச் சோ்ந்த ஹபிபுக் (27), ஆலப்புழா பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராஜ் (29), ஹஜன்ட் சகனம் பகுதியைச் சோ்ந்த நிகாஷ் (42), கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தா்மா் (42), தென்காசி மாவட்டம் செங்கோட்டை சொரிமுத்து (37) ஆகிய 7 பேரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...