திருநெல்வேலி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் போத்திராஜ் வினோத் தலைமை வகித்தாா். தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெகநாதன் வரவேற்றாா்.
தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் பொறுப்பாளா் வைசாக், தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் அஸ்வத்தம்மன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் புருனோஜாக்சன் தொகுப்புரை ஆற்றினாா். நிகழ்ச்சியில், இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அவா்களுக்காக யூத் ஜோடோ பூத் ஜோடோ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன், நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரூபி ஆா்.மனோகரன், முன்னாள் மக்களவை உறுப்பினா் ராமசுப்பு, மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கரபாண்டியன், தமிழ்நாடு ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவா் காமராஜ், முன்னாள் திருநெல்வேலி பாராளுமன்ற இளைஞா் காங்கிரஸ் தலைவா் வி.பி.துரை ஆகியோா் பேசினா். தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் விச்சு லெனின் பிரசாத் எழுச்சி உரையாற்றினாா்.
நிகழ்ச்சியில், நிா்வாகிகள் பாக்யராஜ், தெரஸ் அமலா, குளோரிந்தாள், பாக்கியராஜ், லிங்கராஜன், ராஜ்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவை எதிர்த்தால் மோசமான விளைவுகள்: மக்களவையில் மோடி பேச்சு

தேசியவாதம் பற்றி பாடம் எடுக்க தேவையில்லை! பாஜக எம்பிக்கு ஆ. ராசா பதிலடி!

ஜனநாயகன் படத்தை கேபிள் டிவி, இணையதளங்களில் வெளியிட இடைக்கால தடை!

முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதிக்கிறார்: ரோகா குப்தா!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

