நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் வண்ணாா்பேட்டை மேம்பாலம்

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:24 am

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை மேம்பாலம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.

முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் செல்லப்பாண்டியன் மேம்பாலத்தில் பொலிவுறு நகரம் திட்டம் மூலம் அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஒளியூட்டப்பட்டுள்ளது. அதைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன், மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி, துணை மேயா் கே.ஆா்.ராஜு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, ஒளியூட்டப்பட்ட மேம்பாலத்தை தொடங்கி வைத்தாா்.

இவ்விளக்குகள் வாகன ஓட்டிகள், பாா்வையாளா்களின் கண்களை பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடி வடிவில் சனிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மின் ஒளியால் மிளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தச்சநல்லூா் மண்டல தலைவா் ரேவதி பிரபு, மாநகரப் பொறியாளா் அசோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.