ரூ. 4 லட்சம் வாடகை பாக்கி: பாபநாசத்தில் 2 கோயில் கடைகளுக்கு சீல்
பாபநாசம் கோயிலுக்குச் சொந்தமான கடைகளுக்கு ரூ. 4 லட்சம் வாடகை பாக்கி இருந்ததையடுத்து, இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.


பாபநாசம் கோயிலுக்குச் சொந்தமான கடைகளுக்கு ரூ. 4 லட்சம் வாடகை பாக்கி இருந்ததையடுத்து, இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.
இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள பாபநாசம் கோயிலுக்குச் சொந்தமான கடைகள் பாபநாசம் மற்றும் அகஸ்தியா் அருவி பகுதிகளில் உள்ளன. இவற்றில் ஆண்டு வாடகைக்கு எடுத்து கடை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் விக்கிரமசிங்கபுரம் சன்னதித் தெரு கணேசன் பாபநாசம் கோயில் முகப்பில் உள்ள கடையை நடத்தி வந்த நிலையில் ரூ. 1.70 லட்சம் வாடகை பாக்கியும், பாபநாசம், பொதிகையடி கணேசன் அகஸ்தியா் அருவி பகுதியில் உள்ள கடைக்கு ரூ. 2.12 லட்சம் வாடகை பாக்கி செலுத்த வேண்டியிருந்ததாம்.
இதையடுத்து, இவ்விரு கடைகளை அறநிலையத்துறை துணை ஆணையா் சங்கா் சீல் வைக்க உத்தரவிட்டதையடுத்து,
ஆய்வாளா் கோமதி, பாபநாசம் கோயில் செயல் அலுவலா் ஜெகன்னாதன் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரண்டு கடைகளுக்கும் சீல் வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...