47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயிலில் தெப்போற்சவம்

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி ஸ்ரீஅழகியநம்பிராயா் கோயிலில் தெப்போற்சவம் இரண்டு நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:28 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி ஸ்ரீஅழகியநம்பிராயா் கோயிலில் தெப்போற்சவம் இரண்டு நாள்கள் நடைபெற்றது.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோயிலில் நம்பி சுவாமிகள் இருந்த நம்பி, நின்ற நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலைநம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளனா்.

இக்கோயிலை திருமாழிசைப்பிரான், நம்மாழ்வாா், பெரியாழ்வாா், திருமங்கையாழ்வாா் ஆகிய நால்வா் மங்களாசாஸனம் செய்துள்ளனா். இக்கோயிலில் தெப்போற்சவம் புதன்கிழமை (பிப்.16) தொடங்கியது.

விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது. இரவில் தெப்பத்தில் எழுந்தருளிய அழகிய நம்பிராயா் சுவாமிகள் 12 முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். 2 ஆவது நாளான வியாழக்கிழமை இரவு திருமலைநம்பி தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை ராமானுஜ ஜீயா் சுவாமிகள், ஜீயா் மட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.