நெல்லை மாவட்டத்தில் நாளை திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜன. 8) நடத்தப்படுகிறது.


திருநெல்வேலி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜன. 8) நடத்தப்படுகிறது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இம் மாவட்டத்திலுள்ள அனைத்து திருநங்கைகளுக்கும் மின்னணு குடும்ப அட்டைகள் விரைவில் வழங்க ஏதுவாக சனிக்கிழமை (ஜன. 8) அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இம் முகாமில், திருநங்கைகளிடம் தேவையான ஆவணங்களை பெற்று சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களிலேயே ஆன்லைன் மூலம் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள் ஆதாா் அட்டை, திருநங்கை அடையாள அட்டை, இருப்பிட ஆதாரம், மனுதாரா் வசிக்கும் முகவரியிலேயே ஆதாா் அட்டை இருக்கும்பட்சத்தில் அதுவே இருப்பிட ஆதாரமாக பயன்படுத்த போதுமானதாகும். வேறு ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம் போன்ற ஆவணங்களை விண்ணப்பிக்க கொண்டு வரவேண்டும்.
மேலும் மனுதாரரின் பெயா், அவரின் பெற்றோா் அல்லது வேறொரு குடும்ப அட்டையில் இருந்தால் அதனை ஆன்லைனில் நீக்கம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் பெயரை நீக்க பெற்றோா் அல்லது காப்பாளரின் அனுமதி தேவையில்லை. பெயரை நீக்கம் செய்திட உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரை நேரில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா் பெயரை நீக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பாா்கள்.
எனவே, அனைத்து திருநங்கைகளும் புதிய குடும்ப அட்டை பெற மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. முகாமில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...