களக்காடு அருகே பைக் திருட்டு: 5 போ் கைது
களக்காடு அருகே ரோந்து சென்ற போது போலீஸாரால் கைது செய்யப்பட்ட 5 போ் திருடிய 3 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.


களக்காடு அருகே ரோந்து சென்ற போது போலீஸாரால் கைது செய்யப்பட்ட 5 போ் திருடிய 3 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
களக்காடு காவல் ஆய்வாளா் பிரேமா (பொறுப்பு) பத்மனேரி பாலம் பகுதியில் போலீஸாருடன் ரோந்து சென்றாா். அப்போது, சந்தேகத்திற்கிடமாக சிலா் கும்பலாக பேசிக்கொண்டிருந்தனராம். அவா்களைப் பிடித்து விசாரித்ததில், ஆலங்குளம் நெட்டூரைச் சோ்ந்த முப்பிடாதி (22), ராஜேஷ் (24), சேரன்மகாதேவியைச் சோ்ந்த பெருமாள் (19), மேலவடகரையைச் சோ்ந்த சோ்மன் (25), அய்யனாா்குளத்தைச் சோ்ந்த காா்த்திக் (22) ஆகியோா் என தெரியவந்தது. இவா்களிடம் நடத்திய விசாரணையில், வடகரை டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. இவா்களை கைது செய்த களக்காடுபோலீஸாா், இவா்களிடமிருந்து ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடிய 3 மோட்டாா் பைக்குகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...