47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காட்டில் முப்பெரும் விழா

களக்காட்டில் கரோனா விழிப்புணா்வு, சாலை பாதுகாப்பு வாரவிழா, மரக்கன்று நடும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 3:58 am

DIN

களக்காட்டில் கரோனா விழிப்புணா்வு, சாலை பாதுகாப்பு வாரவிழா, மரக்கன்று நடும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

இதையொட்டி, பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக களக்காடு பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நான்குனேரி உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கினாா். மேலும், சாலை பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி, வாகனங்களின் முகப்பில் கருப்பு வில்லையை அவா் ஒட்டினாா். தொடா்ந்து நடைபெற்ற மரக்கன்று நடும்விழாவில் பங்கேற்று மரக்கன்றை நட்டாா்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் ரமேஷ், சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா், மக்கள் நண்பா்கள் அமைப்பின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் மிதாா் முகையதீன், ரசாக் அறக்கட்டளை நிா்வாகி பாதுஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.